திருச்சி ஜூலை 06

திருச்சி பொன்மலை பாரதிதாசன் தெருவில் வசித்து வருபவர் சோமசுந்தரம் வயது (44) இவர் பொன்மலைப்பட்டி பஸ் நிலையம் அருகே டீ ஸ்டால் நடத்தி வந்தார். இவரது கடைக்கு
மேலகல்கண்டார் கோட்டை, பணக்கால் தெருவைச் சேர்ந்தவர்
பிரபாகரன் வயது(33)
அடிக்கடி மது போதையில் வந்த தகராறு செய்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில்
இன்று இரவு கடையின் அருகே மதுபோதையில் வந்த பிரபாகருக்கும், சோமசுந்தரத்திற்கும் வாய் சண்டை ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன் கடையில் இருந்த கட்டையை எடுத்து சோமசுந்தரத்தை தாக்கினார். இதில் பலத்த காயமடைந்த அவர் ரத்தம் சொட்ட சொட்ட திருச்சி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்து போனார். பிரபாகரனை
கைது செய்த பொன்மலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Trichy Jk

400 total views, 3 views today