திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு நடைபெற்ற புஷ்ப யாக நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருமலை திருப்பதி தேவஸ்தான கோயில்களில் வருடாந்திர பிரம்மோற்சவம் முடிந்த பின், 4 டன் மலர்களால் புஷ்ப யாகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் நடைபெற்ற வருடாந்திர பிரம்மோற்சவம் முடிவுற்றதை அடுத்து தாயாருக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது

ரோஜா, மல்லிகை, கனகாம்பரம், சம்பங்கி, சாமந்தி, தேன் பூக்கள், தாமரை, அல்லி, தாழம்பூ உள்ளிட்ட மலர்களாலும், மருவு, மரிக்கொழுந்து, தவனம், வில்வம், துளசி உள்ளிட்ட இலைகளாலும் தாயாருக்கு அர்ச்சகர்கள் யாகத்தை நடத்தினர். இதற்காக 4 டன் மலர்கள் தமிழகம், ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டன.

 165 total views,  2 views today