திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு

0
0
திமுக தலைவருடன் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் சந்திப்பு!குடியுரிமை திருத்த சட்டங்களுக்கு CAA,NRC & NPR எதிராக தொடர்ந்து போராட்ங்களை நடத்தி வருவதற்கு நன்றி தெரிவித்தும் கருப்பு சட்டங்களை தமிழகத்தில் அனுமதிக்க கூடாது என வலியுறுத்தியும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் சார்பில் திமுக தலைவரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்.சந்திப்பில் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.ஜவாஹிருல்லா, கூட்டமைப்பின் தலைவர் மௌலானா காஜா மொய்தீன் ஹஜ்ரத்,தமுமுக துனை தலைவர் P.S.ஹமீத் ,INTJ துனை தலைவர் முஹம்மத் முனீர், கூட்டமைப்பின் ஓருங்கிணைப்பாளர்கள் மௌலானா மன்சூர் காஷிபி,வெல்பேர் பார்டி தேசிய பொருளாளர் S.N.சிக்கந்தர் மற்றும் கூட்டமைப்பில் உள்ள இஸ்லாமிய அமைப்பு மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் உடனிருந்தனர்.

680 total views, 6 views today