திமுக கையெழுத்து இயக்கம் – பொதுமக்களிடம் நேரடியாக கையெழுத்து வாங்கிய ஸ்டாலின்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது. சென்னை கொளத்தூரில் இந்த கையெழுத்து இயக்கத்தை திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தொடர்ந்து திருவிக நகர் பேருந்து நிலையம் பகுதியில், வீடுவீடாக சென்று பொதுமக்களிடம், அவர் கையெழுத்துக்களை பெற்றார்.

இந்த நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், கலாநிதி வீராசாமி எம்.பி, சேகர்பாபு எம்.எல்.ஏ மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

276 total views, 3 views today