திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் நகரம் மதுரை ரோடு சி.கே.சி.எம். காலனி என்ற முகவரியைச் சேர்ந்த பாக்யராஜ் என்பவரது மகன் சரோன்ராஜ் என்ற நாகராஜ் என்பவர் தொடர்ந்து கொலை மற்றும் ரவுடித்தனமான செயல்களில் ஈடுபட்டு அவர் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் கடந்த 04.09.2017 அன்று அவர் திண்டுக்கல் பேகம்பூர் சி.கே.சி.எம். காலனியைச் சேர்ந்த காதர் ஒலி என்வரை தாக்கி கொலை செய்த குற்றத்தின் அடிப்படையில் அவர் மீது திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் தற்போது திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். மேற்சொன்ன சரோன்ராஜ் என்ற நாகராஜ் என்பவரை தடுப்புக்காவலில் வைக்கக்கேட்டு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்களின் பரிந்துரையை ஏற்று சரோன்ராஜ் என்ற நாகராஜ் என்பவரை தடுப்புக்காவலில் வைக்க திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் வினய் அவர்களால் உத்தரவிடப்பட்டதை தொடர்ந்து சரோன்ராஜ் என்ற நாகராஜ் என்பவர் மதுரை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.

பழநிசுரேஷ்
மாவட்ட நிருபர்.

 493 total views