திண்டுக்கல் மாநகராட்சி 31 வது வார்டு ரவுண்ட்ரோடு புதூர் பகுதியில் நத்தம் கூட்டுகுடிநீர் பணிக்காக தோண்டப்பட்ட குழி கடந்த 8 நாட்களுக்கு மேலாக வேலை ஏதும் நடைபெறாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்கு கூட செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால் அந்தபகுதிவாசிகள் தங்களது வாகணங்களை பாதுகாப்பாக நிறுத்த முடியாத சூழல் நிலவுகிறது .இதை பயன்படுத்தி தங்கள் வாகனங்களை யாரேனும் திருடிச்சென்று விடுவார்களோ என்ற அச்சத்தில் இரவு நிம்மதியாக உறங்கமுடிய வில்லை என்று பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர். எனவே உடனடியாக பணிகளை முடிக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பழநிசுரேஷ்
மாவட்ட நிருபர்.

 378 total views,  2 views today