திண்டுக்கல் மாவட்டம்: சவேரியார்பாளையம் யோவான் என்பவர் மரணிக்க , அவரின் மகள் ஆரோக்கியசெல்வி வாரிசு சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கிறார்.

மூன்று மாதங்கள் இழுத்தடிப்பு செய்து விட்டு, 5000 லஞ்சம் தந்தால் வாரிசு சான்றிதழ் தருவதாக வருவாய் ஆய்வாளர் முத்துப்பாண்டி என்பவர் கூறுகிறார்.

இந்த தகவலை திண்டுக்கல் மாவட்ட மஜக பொருளாளர் மரைக்கார் சேட் அவர்களிடம் முறையிட , அவர் வருவாய் ஆய்வாளரிடம் பேசினார்.அவரும் திமிராக பதில் கூறுகிறார். இதுகுறித்து திண்டுகல் கிழக்கு வட்டாட்சியர் கற்பகம் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.

அவரோ ஆரோக்கியசெல்வியையும், அவரின் தம்பியையும் வர வைத்து விசாரணை என்ற பெயரில் ” நீ பரச்சி. அவன் துலுக்கன். அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? என்றெல்லாம் தவறாகப் பேச, இதை நேரில் சென்று மஜக மாவட்டப் பொருளாளர் தட்டிக் கேட்கிறார். உடனே அவர் மீது வழக்கு . இரவோடு இரவாக கைது செய்து, சிறையில் அடைத்தது போலீஸ் .

இதைக் கண்டித்தும் , வருவாய் ஆய்வாளர் மற்றும் தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் திண்டுக்கல் மாவட்டம.ஜ.க சார்பில் மாவட்டச் செயலாளர் ஹபிபுல்லா தலைமையில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் ம.ஜ.க மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் அன்பரசு ஆகியோர் பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவாக ம.ஜ.க இணைப் பொதுச் செயலாளர் K.M. முகம்மது மைதீன் உலவி கண்டன உரை நிகழ்த்தினார்.

இதில் ம.ஜ.க மாவட்ட , மாநகர, ஒன்றிய, பகுதி, வார்டு , கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 300 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

ராஜா
நிலக்கோட்டை செய்தியாளர்

 405 total views