கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்துள்ள ராமநத்ததில் பாபநாசத்திலிருந்து மதுரை வழியாக சென்னை நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்தும், அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார் சிமெண்ட் ஆலையிலிருந்து சிமெண்ட் ஏற்றிவந்த லாரி ராமநத்தம் மேம் பாலம் அருகில் டயர் பஞ்சர் ஆகி சாலையோரம் நின்று கொண்டிருந்தது.

அப்போது டிரைவர் தூக்கத்தில் லாரியின் பின்பக்கமாக மோதியதாக தெரிகிறது. பேரூந்தில் 30க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைத்தனர்.

முன்பக்கத்தில் அமர்த்திருந்த நடத்துனர் நெல்லையை சேர்ந்த ராமசந்திரன் (வயது 34), அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இருவர் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் வேப்பூர் தீயணைப்பு துறையினர் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு அருகில் உள்ள பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மேலும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்படு வருகிறது.

இது குறித்து ராமநத்தம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை.

 386 total views