தமிழ் தேசியப் பேரியக்க தலைவர் பெ. மணியரசன் மீது தாக்குதல் : காயல் அப்பாஸ் கடும் கண்டனம் !

ஜனநாயக மக்கள்
எழுச்சி கழகத்தின் நிறுவன தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், காவிரிஉரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமானபெ.மணியரசன் நேற்று (10.06.2018) இரவுசென்னை வருவதற்கு தஞ்சை ரயில்நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்தபோது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அவரைகீழே தள்ளி கடுமையாக தாக்கியுள்ளனர்.காயமுற்ற திரு. பெ. மணியரசன் அவர்கள்உடனடியாக தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மணியரசன் மீது வன்முறையாளர்கள் தொடுத்தஇத்தாக்குதலை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வன்மையாக கண்டிக்கிறது.

கருத்தை, கருத்தால் எதிர்ப்பதற்கு பதிலாக, மிரட்டுவது, கொலைவெறித் தாக்குதல்கள்நடத்துவது, கொலை செய்வது என்பது அதிகரித்துவருவது  தொடந்த வண்ணமாக உள்ளது.

எனவே, திரு. பெ. மணியரசன் அவர்களைதாக்கிய குற்றவாளிகளை கண்டறிந்துஉடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும்,அவருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தமிழகஅரசை வலியுறுத்தி கேட்டு கொள்கிறேன் .என்று அவர் தெரிவித்துள்ளார்.

பழநிசுரேஷ்

மாவட்ட நிருபர்.

 

78 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close