“அனைவருக்கும் கல்வியறிவு வழங்கி மதுவில்லா தமிழகம் முலம் ஒட்டுமொத்த தமிழர்களின் உயர்வுக்கு வித்திட்டவர் கர்மவீரர் காமராஜர்” என அரியலூரில் காமராஜரின் 117வது பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி புகழாரம்

அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கர்மவீரர் காமராஜரின் 117 வது பிறந்த நாள் விழா நிகழ்ச்சியையொட்டி காமராஜர் சிலை முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி கலந்துகொண்டு கட்சி கொடியினை ஏற்றி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஜி. ராஜேந்திரன் அனைவரையும் வரவேற்றார்.முன்னாள்மாவட்டதலைவர்பாலகிருஷ்ணன்,மாநில நிர்வாகிகள் சுபசோமு,வழக்கறிஞர் சந்திரமோகன், அகில இந்திய சக்தி கேந்திரா அமைப்பு நிர்வாகி ஜான் அசோக் வரதராஜன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி குழந்தைகளுக்குநோட்மற்றும்எழுதுபொருள்உபகரணங்களை வழங்கிய பின்னர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி பேசியதாவது:
பெருந்தலைவர் காமராஜர் 117 வது பிறந்தநாள் விழாவையொட்டி அரியலூர் நகரில் கலந்து கொண்டு கட்சிக்கொடி ஏற்றி தொண்டர்களை சந்திப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.ஒரு காலத்தில்அரசியலில்ஈடுபடுபவர்கள்பெரும்செல்வந்தராகவும்,வெளிநாடுகள் சென்று கல்வியறிவு பெற்றவர்களாகவும் அல்லது பாரிஸ்டர்பட்டம்பெற்றவர்களாகவும் இருந்தால்தான் ஈடுபடமுடியும். அந்தநிலையைமாற்றிசாமானியர்களும் அரசியலில் மிக உயரிய இடத்தைப் பெறமுடியும் என்பதை சாதித்துக்காட்டிவர்நமதுபெருந்தலைவர்,மேலும்ஆரம்பப்பள்ளிகல்வி‌ கூட தாண்டாத காமராஜர் தமிழக மக்கள் அனைவரும் கல்வியறிவு பெறவேண்டும் என்ற உயரிய நோக்கோடு அவரது ஆட்சிக்காலத்தில் 5 ஆண்டுகளில் 12 ஆயிரம் பள்ளிகள் திறந்து எல்லாபள்ளிகளுக்கும்ஆசிரியர்களை நியமித்தார். காமராஜர் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் பூரணமதுவிலக்குகொள்கையோடும்மற்றும்தமிழகத்தில்சாமானியர்கள் கல்வியறிவு பெற்று அனைவரும் சமத்துவ நிலை அடைய வேண்டும் எனலட்சியத்தோடுசேவையாற்றினார். இன்று மருத்துவம், மற்றும் ஆரம்பக் கல்வியை பிற நாடுகள் ஏற்றத்தழ்வின்றி அனைவருக்கும் சமமாக வழங்கி வருவதைப்போல இந்தியாவில் வழங்கப்படவில்லை ஏழைகளுக்கு தரமான ஆரம்ப கல்வியும் சுகாதாரமும் கிட்டாத நிலைதான்இன்றும் உள்ளது. எல்லோருக்கும் அதை கிடைக்கச் செய்தவர் கர்மவீரர் என்பதை நாம் மறக்கக்கூடாது.காமராஜரின்உயரியசிந்தனைகளைகட்சித்தொண்டர்கள் ஆகிய நீங்கள் நண்பர்களிமும் உறவினர்களிடமும் மற்றும் சுற்றத்தாரிடமும் கூறி காங்கிரஸ் கட்சிக்கு ஒவ்வொருவரும் தலா10 உறுப்பினர்களையாவது சேர்த்து காமராஜர் காட்டிய சமதர்ம அரசியலை அடைய காங்கிரஸ் தோழர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும் எனக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஜி.சேகர், பால. சிவகுமார் ,மாவட்ட பொருளாளர் மனோகரன், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் வீரமணி,பிஐசிசி நிர்வாகி சின்னபொண்ணு, சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஏ.பி .சுரேஷ், துணை அமைப்பு தலைவர்கள் பவானி சிவா, ஓபிசி அணிபாலகிருஷ்ணன் ,அறிவுடைநம்பி,மாவட்டஐஎன்டியூசிபொதுச்செயலாளர் ராஜா, வட்டார தலைவர்கள்கர்ணன்.தியாகராஜன்,திருநாவுக்கரசு,செந்துறைசெந்தில் உடையார்பாளையம் நகர தலைவர் அக்பர்அலி,நகர பொருளாளர் செந்தில், முடிவில் நகர தலைவர் சந்திரசேகரர் நன்றி கூறினார்.

 248 total views,  2 views today