கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டாவது நாளாகஅறுபது சதவீத பேருந்துகள் மட்டுமே இயக்கம் சுவாமியார்மடம் பகுதியில் தமிழக அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கல்வீசி கண்ணாடி உடைப்பு. மார்த்தாண்டம் போலீசார் விசாரணை.


கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டாவது நாளாக போக்குவரத்து தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலை நிறுத்தம் காரணமாக இன்று 12 பணிமனைகளில் இருந்து 866பேருந்துகளில் 60 சதவீத பேருந்துகள் மட்டுமே அதிகமாக தற்காலிக பணியாளர்களை கொண்டு இயக்கபட்டு வருகின்றது
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து கேரள மாநிலம் திருவனந்தபுரம் செல்லும் தமிழக அரசு பேருந்தை மார்த்தாண்டம் அருகே சுவாமியார்மடம் பகுதியில் வைத்து மர்ம நபர்கள் கல்வீசி தாக்கியதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது. மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தினக்கூலி அடிப்படையில் தற்காலிக ஓட்டுனர் ஒட்டிவந்த பேருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

மீடியா7 செய்திகளுக்காக சஞ்ஜீவன்

 531 total views