தமிழக அமைச்சரை பதவி நீக்க வேண்டி மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்

தமிழக அமைச்சரை பதவி நீக்க வேண்டி மக்கள் நீதி மையம் கட்சியினர் ஆளுநருக்கு கோரிக்கை மனு அனுப்பும் போராட்டம்

நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கருர் மாவட்டம் அரவாக்குறிச்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து இஸ்லாமியர் அதிகம் வாழம் பகுதியான பள்ளப்பட்டியில் கமல் பிரச்சரத்தில் ஈடுப்பட்டார். அப்போது காந்தியை கொன்றது ஒரு இந்து தீவிரவாதி என கூறினார். இதனை பி.ஜே.பி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலைய தமிழக அமைச்சர் ராஜோந்திர பாலாஜி கமலுடைய நாக்கை வெட்ட வேண்டும் என கூறினார். இதனை கண்டித்து கருர், திருச்சி மாவட்டத்தில் அக்கட்சியின் அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ச்சியாக இன்று காலை தெற்கு மாவட்ட பொறுப்பாளர்,
சங்கரமகாராஜா தலைமையில்
“தமிழக அமைச்சரை பதவி நீக்க வேண்டி காந்தியடிகள் வேடமிட்டு தமிழக ஆளுநருக்கு கோரிக்கை அனுப்பும் நிகழ்வு திருச்சியில் ஸ்ரீரங்கம் தபால் நிலையத்தில் மக்கள் நீதி மையம் சார்பில் நடைபெற்றது.இதில் வழக்கறிஞர் கிஷோர் உட்பட 15க்கு மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.

Trichy Jk

423 total views, 3 views today