தமிழகத்தின் நலன் காக்க 38 எம்.பிகளும் செயல்படுவோம் : ம தி மு க ஈரோடு கணேசமூர்த்தி எம்.பி தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் என ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி கோவையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஈரோடு மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட கணேசமூர்த்தி கோவை காந்திபுரம் மதிமுக அலுவலகத்திற்கு வந்தார்.அவருக்கு மதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். மதிமுக அலுவலகத்தில் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த எம்.பி.கணேசமூர்த்தி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது நடைபெற்று முடிந்த தேர்தலில் நாடு முழுவதும் பா.ஜ.க வெற்றி இருந்தாலும் தமிழகத்தில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது எனவும், அனைத்து பகுதி மக்களின் எதிர்பார்புகளை பூர்த்தி செய்யும் வகையிலும் தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல்படுவோம் என தெரிவித்தார்.முல்லை பெரியாறு,அமராவதி, கீழ்பவானி என அனைத்து விவகாரங்களிலும் கொங்கு மண்டல எம்.பிகள் இணைந்து செயல்படுவோம் என கூறிய அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்காகவும், வாழ்வாதாரங்களை மீட்கவும், நதிநீர் பிரச்சினைகளுக்காவும் தமிழக எம்.பிகள் போராடுவோம் எனவும் தெரிவித்தார்.

மத்தியில் ஆட்சியில் இல்லை என்ற குறை இல்லாமல் போராடி உரிமைகளை பெற்றுக்கொடுப்போம் என கூறிய அவர், கடந்த முறை இருந்த 37 உறுப்பினர்களுக்கு இணையாக தற்போது தேர்வான மக்களவை உறுப்பினர்கள் செயல படுவோம் எனவும் தெரிவித்தார். மாநிலத்தின் நலன் காப்பதற்காக இணைந்து செயல்பாடுவோம் என கூறிய அவர், தமிழகத்தில் தோற்றவர்கள் ஏதாவது பேசுவார்கள் அதைபற்றி கவலையில்லை என கூறிய கணேச மூர்த்தி, மிருகபலத்துடன் மத்திய அரசு இருந்தாலும் அதை முறியடித்து தமிழகத்தின் நலன் காக்க தேர்வான 38 எம்.பிகளும் செயல்படுவோம் எனவும் தெரிவித்தார்.

" class="__youtube_prefs__ no-lazyload" title="YouTube player" allow="autoplay; encrypted-media" allowfullscreen data-no-lazy="1" data-skipgform_ajax_framebjll="">

 297 total views