துணை முதல்வர் குறித்து அதிமுகவே முடிவு செய்ய வேண்டும்: வெங்கய்யா நாயுடு கருத்து

சென்னை: சென்னையில் ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்த பின் மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு பேட்டியளித்துள்ளார். மரியாதை நிமித்தமாக ஆளுநரை சந்தித்ததாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடு தகவல் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் பூரண குணமடைந்து மக்கள் பணி ஆற்றுவார். மேலும் முதல்வர் உடல் நிலை குறித்து வதந்திகளை பரப்பக் கூடாது என வெங்கய்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். 

துணை முதல்வர் குறித்து அதிமுகவே முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

 505 total views