தடியடியில் காயமடைந்தவர்களை சந்தித்தார் ஏ.கே.விஸ்வநாதன் !

தடியடியில் காயமடைந்தவர்களை சந்தித்தார் ஏ.கே.விஸ்வநாதன் !

April 13, 2018 0 By குடந்தை யாசீன்

சென்னையில் ஏப்.10ம் தேதி மாலை ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை தடுக்கும்
போராட்டம் நடந்தது.

இதில், சிலர் வாலாஜா சாலையில் இரும்பு தடுப்பை தூக்கி எறிந்து, போலீஸை மீறி செல்ல முயற்சித்தனர். அப்போது, போலீஸாருக்கும் போராட்டக்குழுவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தடுப்புகளை மீறி சென்றவர்களை தடுத்த போது சிலர் போலீசாரை தாக்கினர். இதனால், போலீசார் லேசான தடியடி நடத்தும் சூழ்நிலைக்கு வந்தனர்.

இச்சம்பவத்தில் காயமடைந்து சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குனர் களஞ்சியம், ரமேஷ் ஆகியோரை சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் இன்று காலை, சந்தித்து நலம் விசாரித்தார்.

மேலும், அங்கிருந்த டாக்டர்களிடம், இவர்களுக்கு உரிய சிகிச்சையை அளிக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.

27 total views, 3 views today