தங்கத்திற்கு பதிலாக தக்காளியை நகைகளாக அணிந்த மணப்பெண்

பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவில் தக்காளி விலை அதிகரித்துள்ளதால், மணப்பெண் ஒருவர் தனது திருமணத்திற்கு தங்க நகைகளை தவிர்த்து, தக்காளியை அணிகலன்களாக அணிந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளி இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாகிஸ்தானில் ஒரு கிலோ தக்காளி 300 ரூபாயை தாண்டியுள்ளது. இதனால் தனது திருமணத்திற்கு இளம் பெண் தங்க நகைகளுக்கு பதிலாக தலை, கழுத்து, கைகளில் தக்காளியை கோர்த்து நகைகளாக அணிந்துள்ளார். தனக்கு திருமண சீதனமாக 3 கூடை தக்காளி அளிக்கப்பட்டுள்ளதாக அந்த மணப்பெண் தெரிவித்துள்ளார்.

51 total views, 3 views today