டெல்லி இருந்து காணொளி மூலம் பிரதமா் மோடி உரை நிகழ்த்தினாா்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 125-ம் ஆண்டு விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரையின் நினைவு தின நிகழ்ச்சியில்

சுவாமி விவேகானந்தரின் ஆற்றல்மிக்க வார்த்தைகள் இன்றைய இளைஞர்களிடம் காணப்படுவதாக கோவையில் நடைபெற்ற 125-ம் ஆண்டு விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரையின் நினைவு தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தெரிவித்தார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 125-ம் ஆண்டு விவேகானந்தரின் வரலாற்று சிறப்புமிக்க சிகாகோ உரையின் நினைவு தின நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், அமைச்சர் கே. பாண்டியன், சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்தவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் முக்கிய நிகழ்வாக, பிரதமர் மோடி டெல்லியில் இருந்தவாறே, நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களிடம் கலந்துரையாடினார்.

‘என் இனிய தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு மற்றும் அனைவருக்கும் வணக்கம்’ என பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார். இதைக் கேட்ட அனைவரும் எழுந்து நின்று கைகளை தட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது :- அன்று சுவாமி விவேகானந்தர் பேசிய வார்த்தைகள் இன்றைய திறமைமிக்க இளைஞர்களிடம் காணப்படுகிறது. சுவாமி விவேகானந்தரிடம் இருந்து இளம் ஆற்றல் மிக்க இந்தியா கிடைத்துள்ளது. எனவே, இளைஞர்கள் இதனை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும், என ஊக்குவிக்கும் வகையில் அவர் பேசினர்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே. பாண்டியராஜன் பேசுகையில், “சுவாமி விவேகானந்தரின் புகழ் குறித்துப் பேசுவதற்காக கிடைத்த இந்த வாய்ப்பு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது,” என்றார்.

இதைத் தொடர்ந்து, சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ணா மடத்தின் சார்பில் சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை பற்றிய கட்டுரை எழுதுதல், கவிதை, ஓவியம் உள்ளிட்ட 5 போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மட்டும் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கட்டுரை எழுதும் போட்டியில் கலந்து கொண்டனர்.

இதேபோல, சேலம், நாமக்கல், சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 600-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்றனர். இதில், வெற்றி பெற்ற 200 மாணவர்களுக்கு ரூ. 5 லட்சம் மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட்டன.

392 total views, 31 views today

Top

Registration

Forgotten Password?

Close