டெல்லியில் மகளிர் ஆணய தலைவி தொடர் உண்ணாவிரதம்

ஐதராபாத்தில் பெண் மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றவர்களை தூக்கிலிட வலியுறுத்தி டெல்லி பெண்கள் ஆணைய தலைவி 2வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து வருகிறார்.

டெல்லி ராஜ்காட்டில் சுவாதி மாலிவால் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி வருகிறார். தனியாக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐதராபாத்தில் பெண் மருத்துவரை சீரழித்து கொன்றவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும், 6 மாதத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்றும் சுவாதி மாலிவால் கோரிக்கை விடுத்துள்ளார். பெண் மருத்துவர் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வரை போராட்டத்தை தொடர போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

 348 total views