டெங்கு நோய்யை உருவாக்கும் கும்பகோணம் நகராட்சி

டெங்கு நோய்யை உருவாக்கும் கும்பகோணம் நகராட்சி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் டவுன் மேலக்காவேரி கே.எம்.எஸ்.நகர் பகுதியில் நீண்ட நாட்களாக நகராட்சி குடிநீரில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருவதால்
அதனை பயன் படுத்திய சிலருக்கு காச்சல், வாந்திபேதி போன்ற நோய் ஏற்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்ற நிலையில்

இதுவரை கும்பகோணம் நகராட்சி எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை

மேலும்
பொதுமக்கள் குடிக்க குடி தண்ணீர் இல்லாமல் தவிக்கும் நிலை உருவாகி உள்ளது.

குடிநீர் பாதிப்பு எற்பட்ட பகுதியில் சுமார் 500 மேற்பட்ட குடும்பங்கள் இருக்கும் நிலையில்

கும்பகோணம் நகராட்சி பொதுமக்களுக்கு குடிதண்ணீர் லாரி மூலம் நாள் ஒன்றுக்கு இரண்டு லாரி குடிநீர் வழங்கி வருகிறது இருப்பினும்

500 மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் பகுதியில் இரண்டு லாரி குடிநீர் போதுமானதாக இல்லை

எனவே
மாவட்ட நிர்வாகம் மற்றும் கும்பகோணம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக மேலக்காவேரி பகுதியில் மக்களுக்கு குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு அதிகப்படியாக இரண்டு லாரி முலம் குடிநீர் வழங்க வேண்டும் எனவும் மேலும் குடிநீரில் கழிவு நீர் கலப்பதை கண்டறிந்து உடனடியாக சரி செய்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

கும்பகோணம் செய்தியாளர்
O.முகமதுபாசில்

488 total views, 2 views today

Leave a Reply

Registration

Forgotten Password?

Close