டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு முழு அர்ப்பணிப்போடு செயல்பட்டு வருவதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த கோரியும், டெங்கு காய்சலல் உயிரிழந்தோருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கோரியும் தொடரப்பட்ட பொது நல வழக்கில், சுகாதாரத்துறை சார்பில் தாக்கல் செய்யபட்ட பதில் மனுவில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த பதில் மனுவில், டெங்கு காய்ச்சலை பரப்பும் ஏடிஎஸ் கொசு உற்பத்தியை கண்காணிக்க பூச்சியியல் வல்லுநர் குழு தமிழகத்தில் உள்ள 9 மண்டலங்களில் அமைக்கப்படிருப்பதாகவும், டெங்கு காய்ச்சல் பரிசோதனைக்காக மாநிலம் முழுவதும் 125 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, டெங்கு பற்றிய சந்தேகங்கள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தெரிந்து கொள்ள 104 என்ற அவசர தொலைபேசி எண் செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

269 total views, 3 views today