டூவீலர் மீது கார் மோதி 3 பேர் காயம்

தொண்டி: தொண்டி அருகே டூவீலர் மீது எதிரே வந்த கார் மோதிய விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.
தொண்டி அருகே எஸ்.பிட்டினம் போலீசார் தீர்த்தாண்டதானம் பகுதியில் வாகன சோதனையில் நேற்று முன்தினம் ஈடுபட்டனர். அப்போது தானியன் வயல் செந்தில், பூஞ்சோலை கண்ணன், சோலையம்மாள் ஆகியோர் ஒரே டூவீலரில் வந்துள்ளனர். போலீசாரை பார்த்ததும் விரைந்து சென்ற இவர்கள் எதிரே வந்த காரில் மோதினர். இதில் செந்தில் கால் முறிவு ஏற்பட்டு மதுரை மருத்துவமனையிலும் படுகாயம் அடைந்த மற்ற இருவரும் திருவாடானை மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.

607 total views, 2 views today