டாஸ்மாக் பணியாளர் சங்கத்தினர் கோரிக்கையை வலியுறுத்தி பச்சை கலர் உடை அணிந்த போராட்டம்

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 5 மண்டலங்களில் இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி போரட்டம் நடைபெறுகிறது. இதன் ஒரு பகுதியாக திருச்சி மண்டல பணியாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

அப்போது டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், குறைந்த பட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும், பணியிட மாறுதல் வெளிப்படைத் தன்மையுடன் நடைமுறைப் படுத்தவேண்டும்,
500 இளநிலை ஊழியர்கள் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பச்சை வண்ண சட்டை அணிந்து
ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் பால்பாண்டியன் சரவணன், மற்றும் மாநில நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த
மாநில தலைவர் பால்பாண்டியன்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கை சட்டப்பேரவையில் விவாதத்திற்கு வர உள்ள நிலையில் இன்று பச்சை வண்ண உடை அணிந்து 5மண்டலங்களில்
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்படு வருகிறது எனவே அரசு உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் கூறினார்.

Trichy Jk

216 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close