ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

June 20, 2017 0 By Novian Aslam

புதுடெல்லி :

மருந்து நிறுவனங்களில் இருந்து ஸ்டாக்கிஸ்டுகள் மூலம் மருந்து கடைகளுக்கு மருந்து வகைகள் சப்ளை செய்யப்படுகின்றன. மருந்துகளுக்கு 12 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டுள்ளது. இது தற்போதுள்ள வரி விதிப்புடன் அதிகம். சில வகை மருந்துகளுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. சில வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் ஜி.எஸ்.டி. அமலுக்கு வருவதால், மருந்து ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள இருப்பை குறைத்து வருகின்றனர். ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் உண்டு என்றாலும், நடைமுறை சிக்கலை தவிர்க்க இந்த நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருவதாக, மருந்து துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடுகையில் மே மாதத்தில் இருப்பு குறைவாக உள்ளது.

ஏப்ரலுடன் ஒப்பிடுகையில் மே மாத இருப்பு மருந்து நிறுவனங்களுக்கு ஏற்ப 44 நாட்களில் இருந்து 39 நாள், 26 நாட்களில் இருந்து 38 நாள் என சராசரியாக 10 நாள் வரை இருப்பு குறைந்துள்ளது.

இதுகுறித்து அகில இந்திய கெமிஸ்ட் மற்றும் டிரக்கிஸ்ட் அமைப்பை சார்ந்தவர்கள் கூறுகையில், தற்போது இருப்பை குறைப்பதால் ஜூலையில் தட்டுப்பாடு ஏற்படாது. தங்களிடம் உள்ள ஸ்டாக்குகளுக்கு வரி கிரெடிட் கிடைக்குமா என சில சில்லரை விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். இந்த பிரச்னைக்கு தீர்வுகாண மருந்து உற்பத்தி நிறுவனங்களும் உறுதி அளித்துள்ளன. தட்டுப்பாடு மிகச்சிறிதளவு இருக்கலாம். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் அத்தியாவசிய மருந்து உட்பட அனைத்துக்கும் தட்டுப்பாடு எதுவும் ஏற்படாது என்றனர்.

144 total views, 2 views today