ஜி.எஸ்.டி., கருத்தரங்கம் – மத்திய அமைச்சர் தகவல்

சென்னை :

மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம்மெக்வால் சென்னையில் அளித்த பேட்டியில், இந்திய பொருளாதாரத்தில் பல மாற்றங்களும் சீர்திருத்தங்களும் அறிமுகமாகி உள்ளன. முதன் முதலாக நாட்டின் பொது பட்ஜெட்டுடன் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் மிகப்பெரிய சீர்த்திருத்தமாக ஜி.எஸ்.டி., என்ற சரக்கு மற்றும் சேவை வரி ஜூலை 1-ல் நடைமுறைக்கு வருகிறது. வணிக நிறுவனங்களும் இணைந்து, தொழில்துறை நடத்திய கருத்தரங்குகளில், ஜி.எஸ்.டி., பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சந்தேகங்கள் தீர்க்கப்பட்டிருக்கும் என நம்புகிறேன். பொதுமக்களுக்கு மேலும் சந்தேகங்கள் எழுந்தால் மாநிலங்கள் தோறும் பா.ஜ., சார்பில் கருத்தரங்குகள், பொதுக்கூட்டங்கள் நடத்தி விளக்கம் அளிக்கப்படும் என்று அவர் கூறினார்.
இன்னும் அதில், மத்திய அமைச்சர்கள், பொருளாதார நிபுணர்கள், தொழில் துறை மற்றும் வணிகத்துறை பிரதிநிதிகள் பங்கேற்று விளக்கம் அளிப்பர். டில்லியில் ஜூன் 18-ல், ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதில் அதன் விதிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்படும் என்றும் கூறினார்.

197 total views, 0 views today


Related News

  • தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
  • ஜி.எஸ்.டி-யால் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
  • பேட்டரி வாகன உற்பத்தி அதிகரிப்பால் காப்பர் தேவை உயரும்
  • ஜி.எஸ்.டி. குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் – ஜனார்தனன்
  • ஜி.எஸ்.டி., கருத்தரங்கம் – மத்திய அமைச்சர் தகவல்
  • பெட்ரோல் ரூ.67.76, டீசல் ரூ.57.23ஆக விலை மாற்றம் – நாளை காலை முதல் அமல்
  • பெட்ரோல், டீசல் தினமும் விலை மாற்றும் முறை நாளை முதல் அமல் – பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
  • சூர்யா உள்ளிட்ட நடிகர்களுக்குப் பிடிவாரண்ட் ஏன்? பின்னணி என்ன?
  • Leave a Reply