ஜல்லிக்கட்டு வழக்குகளை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்! அறிவிக்கை ரத்தை ஏற்குமா?

டெல்லி: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் இன்று சுப்ரீம் கோர்ட் விசாரிக்க உள்ளது.
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த அறிவிக்கை ரத்து செய்யப்பட்டது. இது உச்சநீதிமன்றத்துக்கும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதை வழக்கின் எதிர்தரப்பாளர்களான பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதேபோல தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றிய ஜல்லிக்கட்டு ஆதரவு சட்டத்திற்கு எதிராக, விலங்குகள் நல வாரியம், கியூப்பா போன்ற அமைப்புகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளன.
இந்நிலையில், ஜல்லிக்கட்டு விவகாரத்திற்கு ஆதரவாக மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு தாக்கல் செய்தது. அதேபோல தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டை அணுகி, ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான மனுக்களை தள்ளுபடி செய்ய மனு தாக்கல் செய்தனர்.
இந்த அனைத்து மனுக்கள் மீதும் ஜனவரி 31ம் தேதி செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட் அறிவித்தது. இதையடுத்து இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.
முன்னதாக, வழக்கை விசாரிக்க இருந்த நீதிபதிகள் அமர்வில் மாற்றம் செய்யப்பட்டது. வழக்கை, தீபக் மிஸ்ரா மற்றும் ரோகிடன் நரிமன் அமர்வு விசாரிப்பர் என கூறப்பட்ட நிலையில், நரிமனுக்கு பதிலாக நீதிபதி அமிதவராய் இந்த அமர்வில் இடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசு பிறப்பித்த அறிவிக்கை ரத்து தொடர்பான உத்தரவை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால், அது ஜல்லிக்கட்டு நடத்த மிகப்பெரிய பலமாக அமையும். ஒருவேளை மத்திய அரசு முடிவை, உச்சநீதிமன்றம் ஏற்காவிட்டால் எதிர் மனுதாரர்கள் பக்கம் பலம் சேர்ந்துவிடும். இதனால் வழக்கு மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

4,335 total views, 6 views today

Top

Registration

Forgotten Password?

Close