ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்… உற்சாகத்துடன் நடந்த கால்கோள் விழாமதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான கால்கோள் விழா உற்சாகத்துடன் நடைபெற்றது.உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெறவுள்ளநிலையில் அதற்கான பணிகள் விறுவிறுப்புடன் நடந்து வருகிறது.இந்த நிலையில் வாடிவாசல் அருகே உள்ள முத்தாலம்மன் கோவில் வாசலில் சிறப்பு பூஜைகளுடன் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் மதுரை மாவட்ட ஆட்சியர் வினய் பங்கேற்று பந்தக்காலை நட்டு வைத்தனர்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எந்த வித அசம்பாவிதமும் இன்றி ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

 348 total views,  2 views today