ஆயுத பூஜை தொடர் விடுமுறையில் ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

கடந்த சனி, ஞாயிறு விடுமுறை நாட்களோடு ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகையும் தொடர்ந்து வந்ததால் 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் சென்னை உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து ஏராளமானவர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்தனர்.

அவர்களுக்காக கடந்த 4-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை மொத்தம் 10745 பேருந்துகள் இயக்கப்பட்டன. இதில் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட 8,440 பேருந்துகள் மூலம் சுமார் 5 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சொந்த ஊருக்கு சென்றவர்கள் திரும்பி வருவதற்காக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும்,
நெல்லை, மதுரை, தூத்துக்குடி, திருச்சி, சேலம், கும்பகோணம், கோவை, மதுரை, திருப்பூர், திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சேலத்தில் இருந்து 80 பேருந்துகளும் திருவண்ணாமலையில் இருந்து 75, வேலூரில் இருந்து 40, கரூரில் இருந்து 5, திருச்சியில் இருந்து 7, நெல்லையில் இருந்து 15 என மொத்தம் 237 சிறப்பு பேருந்துகள் இன்றும், நாளையும் சென்னைக்கு இயக்கப்படுகின்றன

 241 total views,  2 views today