சேலத்தில் பிரபல ரவுடி வெட்டி கொலை

சேலம் அருகே வலசையூர் பாக்யம் நகரை சேர்த்தவர் சங்கர்(31). கட்டிட கூலி வேலைக்கு சென்று வந்த இவர் கடந்த 2012ல் கள்ளக் காதல் தகராறில் வலசையூர் போயர் தெருவை சேர்ந்த மற்றொரு சங்கரை வெட்டி கொலை செய்தார். 

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். ஜாமீனில் வந்த சங்கர் தலைமறைவாகி விட்டார்.இதையடுத்து சங்கரை பிடித்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. 

வீராணம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் சங்கரை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.இந்த நிலையில் நேற்று ஜாமீனில் வெளிவந்த சங்கர், அவரின் உறவினர்களிடம்  ஜாமீனில் ஏன் எடுக்க வரவில்லை என்று தனது உறவினர்களான விஜய், கார்த்தி  மற்றும் சிலரிடம் இன்று அரிவாளுடன் சென்று மறுபடியும் தகராறு செய்துள்ளார்.

அப்போது தகராறு முற்றவோ கார்த்தி, விஜய்  மற்றும் சிலர் சேர்ந்து சங்கரை வெட்டி கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தடுக்க முயன்ற சங்கரின்  தாயார் சுகுனாவுக்கு  வெட்டு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து வீராணம் போலீசார் விசாரித்து வருகின்றனர், இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மீடியா 7 செய்திகளுக்காக சேலத்திலிருந்து ஆசிக்

309 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close