சேலத்தில் ஸ்டாலின் வருகைக்காக பேனர் வைப்பதில் திமுகவினர் இடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில் 4 பேர் படுகாயம். சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதி

#038;autoplay=0&cc_load_policy=0&iv_load_policy=1&loop=0&modestbranding=0&rel=1&fs=1&playsinline=0&autohide=2&theme=dark&color=red&controls=1&" class="__youtube_prefs__ epyt-is-override no-lazyload" title="YouTube player" allow="autoplay; encrypted-media" allowfullscreen data-no-lazy="1" data-skipgform_ajax_framebjll="">

சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள திமுகவை சேர்ந்த வாலிபர்கள் சிலர், திமுக ஈரோடு மாவட்டத்திற்காக ஸ்டாலினை வரவேற்று பேனர் வைத்துள்ளனர். இதற்கு அதேபகுதியை சேர்ந்த திமுகவின் மற்றொரு குழுவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவதாத்தில், இன்றைய தினம் ஒரு தரப்பினர் பேனர் வைத்த வாலிபர்களை ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் யுவராஜ், இளவரசன், அருண்குமார், சசிக்குமார் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கன்னங்குறிச்சி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், மத்திய மாவட்ட செயலாளருமான ராஜேந்திரன் ஆதரவாளர்கள்.

ஏற்கனவே சேலம் மாவட்ட திமுகவில் சட்டமன்ற உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன் தரப்பினருக்கும், வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவாளர்களுக்கும் இடேயே மோதல் நீடித்து வரும் நிலையில், வக்கீல் ராஜேந்திரன் ஆதரவாளர்களுக்குள்ளேய தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது திமுகவினரிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

 699 total views