செவிடன் காதில் சங்கு கடலூர் மாவட்ட ஆட்சியர் மனு பெறும் அலுவலகத்தில் பச்சிளம் குழந்தைகள் கதறல்

செவிடன் காதில் சங்கு 
கடலூர் மாவட்ட ஆட்சியர் மனு பெறும் அலுவலகத்தில்பச்சிளம் குழந்தைகள் கதறல்

கடலூரில் மக்கள் குறை தீர்க்கும் நாள் திங்கள் தோறும் நடைபெற்று வருகிறது

கடலூர் மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளுக்காக விவசாயிகள் மாற்றுத்திறனாளிகள் மாணவர்கள் தாய்மார்கள் என பல்வேறு புகார் மனு மாவட்ட ஆட்சியரை சந்தித்து  அளித்து வருகின்றனர்

திங்கள்தோறும் காலை 10 மணிமுதல் தொடங்குவதால் கடலூர் மாவட்ட எல்லையில் இருந்து பேருந்தில் சுமார் மூன்று மணி நேரமாக தனது பச்சிளம்  குழந்தைகளை அழைத்துக்கொண்டு பயணம் செய்து மனு  அளித்துவிட்டு வீடு திரும்புவதற்கு  சுமார் ஆறு மணி நேரம் ஆகிறது இங்கு மனு அளிக்க வரும் பச்சிளம் குழந்தைகளை அழைத்து வரும் தாய்மார்கள் திறந்தவெளியில்  தனது குழந்தைக்கு பசியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

நீண்ட தூரம் பேருந்தில் பயணித்து மனு அளிக்க வந்த பெண் ஒருவர் மனு அளிக்கும் இடத்தில் பச்சிளம் குழந்தைக்கு பசி ஆற்றுவதற்காக மனு அளிக்க வந்த பேப்பரை மறைத்துக்கொண்டு குழந்தைக்கு பசியாற்றினார் இதைக்கண்ட பெண்கள் அமைப்பைச் சேர்ந்த சிலர் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து அங்கு உள்ள அரசு அதிகாரிகளை அழைத்து தனது கண்டனத்தை   தெரிவித்தனர் அவர்கள் நிருபர்களிடம்  கூறியதாவது

மத்திய மாநில அரசுகள் பெண்களுக்கென பல்வேறு இட ஒதிக்கீடு  நலத்திட்டங்கள் செய்து வருகிறது ஆனால் மாவட்ட நிர்வாகங்கள் பெண்களுக்கு ஏற்படும்  இன்னல்களை சிறிதும் பெரு படுத்துவதில்லை என கடும் புகார் தெரிவித்தனர்

நாங்கள் பலமுறை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்கும் இடத்தில் நீண்ட தூரத்திலிருந்து வரும் பெண்களுக்கு பச்சிளம் குழந்தைகளுக்கு  பசியாறும் தனி அறையை  ஏற்படுத்தித் தாருங்கள் என பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் செவிடன் காதில் சங்கு ஊதியது போல் உள்ளது என பெண்கள் அமைப்பினர் கூறினார்கள் 

824 total views, 2 views today

Be the first to comment

Leave a Reply