செய்தியாளர்களை புறம் தள்ளும் வருவாய் துறை அதிகாரிகள், ஜனநாயகத்தின் நான்காம் தூண் என்பதை நிருபிக்கும் காலம் வந்து விட்டது.

திருச்சி மாவட்டத்தில் குறிப்பாக மணப்பாறை பகுதியில் ஜனவரி 16 ம் தேதி முதல் தொடங்கிய ஜல்லிக்கட்டு மே மாதம் வரை நடைபெற உள்ளது இந்நிலையில் மணப்பாறை பகுதியில் இதுவரை 5 ஜல்லிக்கட்டு போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டி தொடர்பான செய்திகளை சேகரிக்க செல்லும் செய்தியாளர்களை மாவட்ட நிர்வாகமோ அல்லது வருவாய் துறை அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை செய்தியாளர்கள் சேகரிக்க கேலரிகல் மற்றும் மேற்கூரைகள் கூட அமைத்து தருவதில் ல்லை செய்தியாளர்கள் கடும் வெயிலில் நின்று செய்தி சேகரிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள் இதனால் பல செய்தியாளர்கள் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் நாளை கருங்குளத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை செய்தி சேகரிக்க கூட வருவாய் துறையினர் இடம் அமைக்கவில்லை எனவே நாளை அனைத்து செய்தியாளர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து நாளை செய்தி சேகரிக்க உள்ளனர் பல முறை மணப்பாறை வட்டாச்சியரிடம் முறையிட்டு எவ்வித பலனும் இல்லை மணப்பாறை செய்தியாளர்கள் அனைவரும் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளனர்

செய்தி சேகரிக்கும் செய்தியாளனும் ஒரு மனிதன் தான். வாடிவாசல் அருகே மேடை அமைத்து அதில் பந்தல் போட்டு நேர நேரத்திற்கு டீ, காபி, மினரல் வாட்டர், மதிய உணவு கேட்கவில்லை. பாதுகாப்பாக செய்தி சேகரிக்க ஒரு சிறிய இடம் தான் கேட்கின்றோம். ஆனால் ஒவ்வொரு முறையும் பாதுகாப்பற்ற முறையில் இரண்டு டேபிள் போட்டு அதில் ஏறி நின்று கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகிறார்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள். செய்தியாளர்களுக்கு இனி இடமே கொடுக்காவிடிலும் பரவாயில்லை. உண்மை செய்தியை உரக்கச் சொல்ல களமிறங்குவோம். வெற்றி நமதாகவே மட்டும் இருக்க முடியும். யாம் வெல்லவில்லை என்றால் வேறு யார் வெல்ல முடியும்.
ஒன்று கூடுவோம். வெற்றி பெறுவோம்.

மத்திய மண்டல பொறுப்பாளர் அப்துல்லா உடன் மணப்பாறை செய்தியாளர் ராமச்சந்திரன்

4,434 total views, 4 views today

Top

Registration

Forgotten Password?

Close