சென்னையை சேர்ந்த பெண்
குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் கணவனுடன் சேர்ந்து வைக்க கோரி பதினைந்து நாட்களாக இரவு பகலாக கணவன் வீட்டு முன் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார்.

சென்னை எண்ணூர் பகுதியை சேர்ந்தவர் ஆயிஷா சிறு வயதில் தாய்தந்தையை இழந்தவர் உறவினர்கள் அரவணைபில் வளர்ந்து வந்து உள்ளார் .இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை பார்த்து வந்து உள்ளார் .இந்நிலையில் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ரயில் பயணத்தில் ஏற்பட்ட பழக்கத்தில் கன்னியாகுமரி மாவட்டம் கண்ணகோடு பகுதியை சேர்ந்த றிபினை காதலித்து கிறிஸ்தவரான றிபினை முஸ்லீமாக மதமாறி முஸ்லிம் முறைப்படி திருமணம் நடந்து உள்ளது கணவனின் தம்பி மற்றும் அக்கா மற்றும் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்து வந்து உள்ளனர். இந்நிலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன் கணவன் வெளிநாட்டு செல்வதாக கூறி விட்டு சென்று உள்ளார் செல்போன் மூலம் தொடர்பில் இருந்த கணவர் கடந்த நான்காம் தேதி மார்த்தாண்டத்தில் உள்ள சொந்த ஊருக்கு வருவதாக தெரிவித்து உள்ளார்.அதன் பின் ஊருக்கு வந்த பின் றிபினை வீட்டு காவலில் வைத்து இருப்பதாக மனைவிடம் றிபின் செல்போன் மூலம் தெரிவித்ததை தொடர்ந்து சென்னையில் இருந்து மார்த்தாண்டம் வந்த ஆயிஷா கணவனின் வீடு பூட்டிய நிலையில் இருப்பதால் இது சம்பந்தமாக குழித்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு இரவு பகலாக பதினைந்து தினங்களாக கணவனின் வீட்டு வாசலில் கணவனை கண்டு பிடித்து சேர்ந்து வைக்க கோரி தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார் .
இந்த நிலையில் றிபினை காணவில்லை என்றும் கண்டு பிடித்தால் காவல்நிலையத்தை தொடர்பு கொள்ள ஊர்மக்கள் சார்பில் தெரு முழுவதும் சுவரொட்டிகளை பொதுமக்கள் ஒட்டி உள்ளனர்.

மேலும் போராட்டத்தினிடயில் இன்று அதிகாலை பசி மயக்கத்தாலும்
உடல் தளர்வாலும் மயங்கி விழுந்த ஆயிசாவை அருகிலிருந்தவர்கள் மார்த்தாண்டத்திலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்….கண்ணகோடு பகுதி ஊர் பொதுமக்கள் ஆயிசாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துவருவது குறிப்பிடதக்கது.

மீடியா7 செய்திதிகளுக்காக சஞ்ஜீவன்

 1,027 total views