சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் 19 நாட்களுக்கு பிறகு நேற்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. வடகிழக்கு பருவமழை காரணமாக பெய்த கனமழையால ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் நேற்று பள்ளிகள் – கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும், அங்கு பாதிக்கப்பட்ட மாணவ–மாணவிகளுக்கு புதிதாக பாடப்புத்தகம், நோட்டு, சீருடை போன்றவை வழங்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆவடி, மணவாளன்நகர், அயனம்பாக்கம், முகப்பேர் மேற்கு, திருவொற்றியூர், முகப்பேர் கிழக்கு, சுபரெட்டி பாளையம், நாபாளையம், திருவள்ளூர் புங்கத்தூர் ஆதி திராவிடர் பள்ளி உள்பட 9 பள்ளிகள் தவிர மற்ற பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டன. 19 நாட்களுக்கு பிறகு பள்ளி, கல்லூரிகள் நேற்று திறக்கப்பட்டதால் மாணவ– மாணவிகள் உற்சாகத்துடன் வகுப்பறைக்கு சென்றார்கள்.

1,058 total views, 2 views today