செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை இறுதி கட்ட ஆய்வு இன்னும் ஒரு இரு வாரங்களில் ரயில் இயக்க முடிவு

செங்கோட்டை-புனலூர் அகல ரயில்பாதை இறுதி கட்ட ஆய்வு இன்னும் ஒரு இரு வாரங்களில் ரயில் இயக்க முடிவு

தமிழகம் மற்றும் கேரளாவை இணைக்கும் ரயில் சேவையான செங்கோட்டை – புனலூர்
இடையேயான, 112 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, 50 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, 358 கோடி ரூபாய் செலவில், அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2010, செப்., 20ல், இந்தப் பாதையில் மீட்டர் கேஜ்
ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அகல ரயில் பாதை பணி துவங்கியது.

செங்கோட்டை – புனலூர் இடையே, எட்டு ரயில் நிலையங்கள் உள்ளன. இதில்,
செங்கோட்டை, பகவதிபுரம், ஆரியங்காவு, புது ஆரியங்காவு, எடப்பாளைம்,
கழுதுருட்டி , தென்மலை, புனலூர் போன்ற ரயில் நிலையங்கள் உள்ளது.

இந்த வழி தடத்தில் பழைய குகைகள் பெரிதாக்கப்பட்டும், புதிதாக மேலும் 1
குகை அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வந்த நிலையில், நிதி பற்றாக்குறை,
மற்றும் இயற்கை சீற்றம் உட்பட பல்வேறு காரணங்களால் 4 ஆண்டுகளில்
முடிக்கப்பட வேண்டிய பணி முடிக்க 7 ஆண்டுகளாக காலதாமதம் ஆகிவிட்டது.

தற்போது இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. இதனிடையில் நியூ
ஆரியங்காவிலிருந்து- எடமண் வரை கடந்த அக்டோபர் மாதம் ரயில் இயக்கி சோதனை
நடத்தப்பட்டது. இந்த நிலையில் இதனைத்தொடர்ந்து
இன்று (12ம் தேதி ) செங்கோட்டை – கொல்லம் இடையே உள்ள இந்த பாதையில் நியூ ஆரியங்காவு முதல் இடமன் வரையிலான அகலரயில்பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையாளர் மனோகரன் ட்ராலி மூலம் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் நாளை (13ம் தேதி) இந்த தடத்தில் அதிவேகமாக ரயிலை இயக்கி சோதனை நடத்துகிறார் பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் நடத்தப்படும் சோதனை முடிந்து ரயில்வே துறையின் அனுமதி பெற்று 2018 ஜனவரி மாத இறுதி முதல் செங்கோட்டை – புனலூர் வரை முழுமையான ரயில் சேவை நடைபெறும் என ரயில்வே
துறை வட்டாரங்கள் தெரிவிக்கப்பட்டது.

29 total views, 0 views today