செங்கோட்டை குண்டாற்று ஆற்று பாலத்தில் கார் கவிழ்ந்து 9பேர் காயம் 2 பேர் படுகாயம்

செங்கோட்டை குண்டாற்று ஆற்று பாலத்தில்
கார் கவிழ்ந்து 9பேர் காயம் 2 பேர் படுகாயம்

சுற்றுலா வந்து ஊர் திரும்பிய போது செங்கோட்டை குண்டாற்று ஆற்று பாலத்தில் கேரள மாநில கார் கவிழ்ந்து 9பேர் காயம் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

கேரளமாநிலம் கொல்லம் பாளையத்தோடு வயல்தோப்பு பகுதியை சார்ந்தவர்கள் சுமார் 150பேர் கார், பஸ், இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளில் நெல்லை மாவட்டம் பொட்டல்புதூர் பள்ளிவாசலுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பி கொண்டு இருந்தனர்.

செங்கோட்டை குண்டாறு ஆற்றுக்கு அருகே செல்லும் போது லாரி ஓன்று எதிரே வந்ததால் அதன் மீது மோதாமல் இருக்க கார் ஓட்டுநர் ஷாநவாஸ் காரை திருப்பியுள்ளார். இதில் கார் தடுமாறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது. அப்போது எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது, இதில் காரில் இருந்தவர்கள் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அனைவருமே ஆற்றுக்குள் விழுந்தனர்.

உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணிகள் துறையினர் விரைந்து வந்து ஆற்றுக்குள் விழுந்தவர்களையும் மீட்டு செங்கோட்டை, தென்காசி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதில் இருசக்கர வாகனத்தில் வந்த காவல்துறை ஆய்வாளரின் தாய், தந்தை இருவருக்கும் கால்முறிவு ஏற்ப்பட்டது. காரில் வந்த சிஜு, அப்ஸல், சமீனா, முபீதா ஹிதா, இச்சு, அப்ஸல் ஆகியோருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளது. இதில் காரை ஊட்டிய ஷாநவாஸ் தலையில் பலத்த காயம் அடைந்ததால் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இது குறித்து செங்கோட்டை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

66 total views, 3 views today

Be the first to comment

Leave a Reply