செங்கோட்டை அரசு மருத்துவ அலுவலருக்கு தமுமுக சார்பில் பாராட்டு

செங்கோட்டையில்க சார்பில் தமிழக அரசின் மருத்துவ துறையின் சிறந்த மருத்துவர் விருதினை பெற்ற செங்கோட்டை அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஸ்கண்ணனுக்கு பாராட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்டச்செயலாளர் செங்கைஆரீப் தலைமை தாங்கினார். மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் முகம்மதுகாமில், எஸ்எம்ஐ மாவட்டப்பொருளாளர் அபாபில்மைதீன், மாவட்ட மமக செயலாளர் கொலம்பஸ்மீரான் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
நகர இளைஞரணிச்செயலாளர் முகம்மதுமன்சூர் அனைவரையும் வரவேற்று பேசினார்.

அதனைதொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக மாநில மருத்துவ அணி துணைச்செயலாளர் முகம்மதுயாகூப் கலந்து கொண்டு மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜேஸ்கண்ணனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்

கட்சியின் கிளை நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி செய்தியாளர் வீரமணி

66 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close