செங்கோட்டையில் புதிய தாலுகா கட்டுவதற்கான இடம் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர், அதிகாரிகள் ஆய்வு

செங்கோட்டையில்கா அலுவலகம், புளியரையில் புதிய வீ.ஏ. ஓ அலுவலக கட்டிடங்கள் கட்டுவதற்கான இடங்களை கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் சனிக்கிழமை ஆய்வு செய்தார்.

கேரள மாநிலத்துடன் கடந்த 1956ம் ஆண்டுக்கு முன்பு செங்கோட்டை இருந்த போது
அரசு மருத்துவமனை, தீயணைப்பு துறை, பிஎஸ்என்எல் அலுவலகம், நெடுஞ்சாலை துறை அலுவலகம், தாலுகா அலுவலகம், நீதிமன்றம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், காவலர் குடியிருப்பு, உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் ஒரே இடத்தில் நகரின் மைய பகுதியில்
கட்டப்பட்டது.

இந்த கட்டிடங்கள் அனைத்தும் கட்டப்பட்டு பல ஆண்டுகளை கடந்து தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. பழுதான கட்டத்தை அகற்றி விட்டு புதிய கட்டிடங்கள் கட்ட வேண்டும் என தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.

இந்நிலையில் தற்போது தாலுகா அலுவலகம் கட்ட தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இதனை தொடர்ந்து புதிய கட்டிடம் கட்ட இடம் ஆய்வு செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கடையநல்லூர் சட்டமன்ற முகமது அபுபக்கர், திமுக நகர செயலாளர் ரகீம், ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், தாசில்தார்செல்வகுமார், ஆர்.ஐ .தாமரை செல்வன், வீஏ ஓ, ஷாஜகான், நகராட்சி ஆணையர் ராஜமாணிக்கம், செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்க கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இது குறித்து கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் முகமது அபுபக்கர் கூறுகையில் :

செங்கோட்டையில் பழைய கட்டிடத்தில் உள்ள தாலுகா அலுவகம் முதலில் கட்டப்படும். பின்னர் இந்த வளாகத்தில் உள்ள அரசு அலுவலகள் ஒவ்வொன்றாக கட்டப்படும், மேலும் செங்கோட்டை நகரின் வருவாயை பெருக்கிடும் வகையில் வார சந்தை தினசரி சந்தையாக மாற்றம் செய்யப்பட உள்ளது, அதற்கு எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 50 லட்சம் வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார்.

பின்னர் புளியரை ஊராட்சியில் புதிதாக அமைய உள்ள கிராம நிர்வாக அலுவலக இடத்தை பார்வையிட சென்றார்.

தென்காசி செய்தியாளர் வீரமணி

135 total views, 3 views today

Top

Registration

Forgotten Password?

Close