இந்த மாதம் இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன கைப்பேசி தயாரிப்பு நிறுவனமான விவோ, ‘விவோ ஃபிரீடம் கார்னிவல்ஆன்லைன் சேல்ஸ்’ என்னும் சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. இந்த சுதந்திர தின விற்பனை ஆகஸ்ட் 7 முதல் ஆகஸ்ட் 9 வரை விவோவின் பிரத்யேக ஈ-காமெர்ஸ் தளத்தில் நடக்கும். இதில் வாடிக்கையாளர்கள் சிறப்புத் தள்ளுபடி, கூப்பன் டீல்கள், கேஷ்பேக் சலுகைகள் போன்றவற்றைத் தேர்ந்தெடுக்கப்பட்ட விவோ திறன்பேசிகள், பிற துணைக் கருவிகள் மீது பெறலாம். இவற்றுள் புதிதாக வெளிவந்துள்ள விவோ நெக்ஸ் விவோ V9 கைப்பேசிகளும் அடங்கும். இதைத் தவிரவும் பல்வேறு சலுகைகள் இந்த நாட்களில் தரப்படவுள்ளன.

இந்த விற்பனையின் சிறப்பு அம்சம் விவோ நெக்ஸ் மற்றும் விவோ V9 கைப்பேசிகள் ரூ.1947க்கும், USB கேபிள்கள், இயர் ஃபோன்கள் ரூ. 72ற்கும் விற்கப்படவுள்ளன. இந்த ஃப்ளாஷ் சேல் மூன்று நாட்களும் இரவு பன்னிரண்டு மணிக்குத் தொடங்கி ஸ்டாக் கையிருப்பு உள்ளவரைத் தொடரும். இந்த மூன்று நாட்களிலும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட மாடல்களில் ரூ.4000 வரை கேஷ்பேக் பெறலாம். இதைத்தவிர்த்து, எல்லா விவோ திறன்பேசிகளுக்கும் பன்னிரண்டு மாதங்களுக்கான வட்டியில்லாத் தவணை முறையும் கொண்டுவரப்படவுள்ளது. ஒவ்வொரு விவோ நெக்ஸ், விவோ V9 மற்றும் விவோ X21 கைப்பேசிகளுடனும் ரூ.1200 மதிப்புள்ள ப்ளூடூத் இயர் ஃபோன்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளது.

594 total views, 3 views today