புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே திருச்சி – மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூதக்குடி கிராமப்பகுதியில் உள்ள சுங்ககேட் ஊழியர்களுக்கு கடந்த 2 வருடங்களாக சம்பள உயர்வும், தொழிலாளர் நலத்திட்டங்களையும் அமுல்படுத்தாத நிர்வாகத்தை கண்டித்து நேற்று மாலை 3 மணி முதல்  ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர் நல ஆணையம் உத்தரவு அளித்தும் அந்த பரிந்துரைபடி அடிப்படை சம்பளம் கொடுக்க நிர்வாகம் முன்வரவில்லை என்றும், மேலும் தொழிலாளர் நலத் திட்டங்களையும்  அமுல்படுத்தவில்லை என்றும்,  ஊழியர்களின் நலனில் அக்கறை இல்லாமல் நிர்வாகம் செயல்படுவதாகவும் ஊழியர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டு இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டம் தொடர்வதால் பல லட்சம் சுங்க வரி இழப்பு என கூறிப்படுகிறது. நிர்வாக தரப்பில் மனித வளத்துறை மேலாளர் அப்துல் கரீம் கூறும் போது அவரைப் ஊழியர்கள் சூழ்ந்து கொண்டு சரமாரியாக கேள்வி கேட்டனர்  அவருடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்பு  ஊழியர்கள் சங்க பிரதிநிதிகள் ஊழியர்களை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர்.

 631 total views,  2 views today