சிவசைலத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி எம்எல்ஏ விடம் விவசாயிகள் மனு

சிவசைலத்தில் நெல்கொள்முதல் நிலையம் அமைக்க கோரி எம்எல்ஏ விடம் விவசாயிகள் மனு

February 13, 2018 0 By Thamimun ansari

கடையம்,பிப்13:

கடையம் அருகே உள்ள சிவசைலத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க கோரி அரசபத்து நீர் பாசன விவசாயிகள் ஆலங்குளம் எம்எல்ஏ பூங்கோதையிடம் மனு அளித்தனர். 

கடையம் அருகே கடனா அணையின் நீர்பாசன அரசபத்து கால்வாயில் மொத்தம் 1500 ஏக்கர் நஞ்சை நிலம் உள்ளது. இதில் 1250 ஏக்கர் விவசாய நிலங்கள் சிவசைலம் ஊராட்சிக்கு உட்பட்ட இடத்தில் உள்ளது . இந்த நிலங்களின் உரிமையாளர்கள் பெத்தான்பிள்ளை குடியிருப்பு, பங்களா குடியிருப்பு, புதுகுடியிருப்பு, சிவசைலம், கல்யாணிபுரம், சம்பன்குளம், அழகப்பபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆவர். மீதமுள்ள 250 ஏக்கர் விவசாய நிலங்கள் கருத்தபிள்ளையூர் விவசாயிகளுக்கு சொந்தமானதாகும். தற்போது அரசின் நேரடி கொள்முதல் நிலையம் கருத்தபிள்ளையூரில் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள விவசாயிகள் கருத்தபிள்ளையூருக்கு சென்று வர நேரம், அலைச்சலும், வீண் செலவும் ஏற்படுகிறது. எனவே 7 கிராமங்களுக்கு பொதுவாக உள்ள சிவசைலம் கிராமத்தில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம்  அமைக்க கோரி  ஆலங்குளம் பூங்கோதை எம்எல்ஏவிடம் மனு அளித்தனர் . மேலும் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் புரோக்கர்கள் தலையீடு அதிகமாக இருப்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கபட்டு வருவதாக புகார் கூறினர். அரசின் வேளாண்மை பிரிவு தலைமை செயலாளரிடம் பேசுவதாக எம்எல்ஏ  கூறினார். மேலும் தொடர்ந்து இதே நிலைமை நீடித்தால் விவசாயிகளை ஒன்றிணைத்து கண்டன ஆர்பாட்டம் நடத்தபடும் என அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதில் அரசபத்து நீர்பாசன கமிட்டி தலைவர் கண்ணன், விவசாயிகள் சரவணன், அரிராம் சேட், சைலப்பன், கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், குருசாமி,  ரவிகுமார், கண்ணன், வடிவேல், மாரியப்பன், அந்தோணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

490 total views, 2 views today