சிறுவர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய தொழுதாவூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர்

தமிழகத்தில் கொரோனா தொற்று வைரஸ் நோய்தாக்குதல் பாதிகக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு இருப்பதால் மக்களுக்கு அச்சமும் தீவிரம் அடைந்த நிலையில் காணப்படுகிறது.இந்த கொரோனா தாக்குதல் திருவள்ளூர் மாவட்டத்தில் முதல் ஒருவருக்கு துவங்கி பாதிக்கப்பட்டவர்களின் தற்போதைய எண்ணிக்கை 12 ஆக உயர்ந்திருக்கிறது.எனவே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திருவள்ளூர் மாவட்டம் தொழுதாவூர் கிராம ஊராட்சி மன்ற தலைவர் திரு.D.அருள்முருகன் அவர்கள் சிறுவர்களுக்கு கொரோனா போன்று வேடமிட்டு விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊராட்சிக்குட்பட்ட அனைத்து கிராம பகுதியிலும் சென்று விழிப்புணர்வு மேற்க்கொண்டார்.இதில் கிராம ஊராட்சி மன்ற துணை தலைவர் சிவாஜி ஆகியோர் கலந்துக்கொண்டனர்.

திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.

120 total views, 3 views today