தேனி அல்லிநகரம் காவல் நிலையத்தில் 2019 ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அல்லிநகரம் பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் 19 வயதுள்ள சூர்யா என்பவர் மீது அதே பகுதியைச் சார்ந்த 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு தேனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது…

இன்று இந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து சூர்யா மீது சுமத்தப்பட்ட குற்றம் நிருபிக்கப்பட்ட நிலையில். குற்றவாளி சூர்யாவுக்கு ஒரு ஆயுள் தண்டனையும் 10.000 ரூபாய் அபராதமும். இதை கட்ட தவிரினால் மேலும் இரண்டு வருட கூடுதல் தண்டனையும் வழங்கப்பட்டது

மேலும் இந்த வழக்கில் பாதிக்கப் பட்ட சிறுமியின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 7 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என மகிளா விரைவு நீதிமன்ற நீதிபதி A கீதா தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து குற்றவாளி சூர்யாவை மதுரை மத்தியசிறைச்சாலைக்கு கொண்டு காவல்துறை அழைத்து சென்றனர்.

 979 total views