சிந்துவை சொந்தம் கொண்டாடும் ஆந்திரா, தெலங்கானா மக்கள்!

ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த பிவி சிந்துவை இரு மாநிலத்தவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் பிவி சிந்து. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஆனால் ஆந்திர மக்களோ சிந்து ஆந்திராவை சேர்ந்தவர் என்றும், தெலங்கானாவினர் அவர் தெலங்கானாவை சேர்ந்தவர் என்றும் சொந்தம் கொண்டாடுகின்றனர். அவர் ஹைதராபாத்தில் பிறந்து, வளர்ந்தவர் என்பதால் தெலங்கானாவை சேர்ந்தவர் என்கின்றனர். எதிர் தரப்பினர் சிந்து விஜயவாடாவை பூர்வீகமாக கொண்டவர், அதனால் ஆந்திரா என்கின்றனர். இதற்கும் ஒரு படி மேலாக மற்றொரு தரப்பினர் சிந்துவின் சாதியை தேடிக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சிந்துவின் அம்மா, சிந்துவை இந்தியாவின் மகள் என்று கூறியிருக்கிறார். சிந்துவின் வெற்றியையும், இந்தியாவிற்கு அவர் சேர்ந்த பெருமையையும் கொண்டாடும் தருணத்தில் இம்மாதிரியான விவாதங்கள் அர்த்தமற்றது என்று சிந்துவின் அம்மா விஜயலஷ்மி தெரிவித்துள்ளார். சிந்துவின் அப்பா ரமணா தெலங்கானா பகுதியில் உள்ள அதிலாபாத் மாவட்டம் நிர்மல் பகுதியில் பிறந்தவர். சிந்துவின் அம்மா விஜயவாடாவில் பிறந்தவர். இந்தியாவின் புகழை உலக அளவிற்கு கொண்ட சிந்து இந்தியாவின் மகள் என்று அவருடைய பெற்றோர் கூறுகின்றனர்.

104 total views, 0 views today


Related News

  • 'ஆன்லைன்' மது 'புக்கிங்' கைவிட்டது கேரள அரசு
  • சிந்துவை சொந்தம் கொண்டாடும் ஆந்திரா, தெலங்கானா மக்கள்!
  • ஆந்திராவில் கைதான 32 தமிழர்களின் ஜாமின் மனு தள்ளுபடி
  • வீரப்பன் கூட்டாளிகள் 4 பேர் மைசூர் சிறையில் இருந்து விடுவிப்பு
  • மசூதிகளில் ஒலிபெருக்கிகளுக்கு கட்டுப்பாடு: இஸ்லாமிய கூட்டமைப்பு யோசனை
  • Leave a Reply