சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி மாணவி வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா செல்வதற்கு தேர்வு

தமிழக பள்ளி கல்வித்துறை அறிவிப்பின்படி அறிவியல் தொழில்நுட்பம் கலை இலக்கியத் துறைகளில் தனித்து விளங்கும் மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் முதல் கட்டமாக 50 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விப் பயணம் மேற்கொள்ள தேர்வு செய்யப்பட்டுள்ளனர்

இந்தத் திட்டத்தின் கீழ் பட்டாசு ஆலைகளில் தீ விபத்து தடுப்பு முறைகள் என்ற தலைப்பில் சிதம்பரம் ராமகிருஷ்ணா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படிக்கும் மாணவி பூஜா தயாரித்த அறிவியல் கண்காட்சி பொருள் மாநில தென்னிந்திய மற்றும் இந்திய அளவில் நடைபெற்ற கண்காட்சியில் வெற்றி பெற்றார் தொடர்ந்து புதுடில்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான கண்காட்சியில் மாணவி பூஜா பங்கேற்று தற்போது பின்லாந்து, ஸ்வீடன், ஆகிய வெளிநாடுகளுக்கு அறிவியல் கல்வி சுற்றுலா செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்,

தமிழக அளவிலான 50 பேர் இடம் பெற்றுள்ளனர் இவருக்கு சிதம்பரம் கல்வி மாவட்ட அலுவலர் சி சுவாமி முத்தழகன் வாழ்த்து தெரிவித்தார் பள்ளியில் இன்று நடைபெற்ற இறைவனக்க கூட்டத்தில் மாணவி பூஜாவுக்கு பள்ளி நிர்வாகிகள் எஸ் ஆர் பாலசுப்பிரமணியன், இராமநாதன், எஸ் ஆர் திருநாவுக்கரசு, ஆகியோர் பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுரு ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

பூஜாவை அறிவியல் கண்காட்சிக்கு தயார் செய்த அறிவியல் ஆசிரியர் ,உதவி தலைமை ஆசிரியர் சங்கரன் கூறும்போது 2016 இல் பள்ளியில் நடைபெற்ற கண்காட்சிப் போட்டியில் பூஜா தேர்வு பெற்றார் அதன் பின்பு மாவட்ட அறிவியல் கண்காட்சியில் வெற்றி பெற்றார், பின்பு மாநில அளவில் சென்னையில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்காட்சியில் வெற்றி பெற்றார், பின்பு கேரள மாநிலம் திருச்சூரில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றார், பின்பு டெல்லியில் நடைபெற்ற கண்காட்சியில் முதலிடத்தையும் பெற்றார். கடலூர் மாவட்டத்தில் சிதம்பரம் ராமகிருஷ்ணா பள்ளியில் 50 மாணவிகளில் பூஜா மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் ,பட்டாசு தொழிற்சாலையில் நிறைய உயிரிழப்புகள் ஏற்படுகின்றன அதை கருத்தில் கொண்டு உயிர் இழப்பை தடுக்கும் விதமாக எளிய முறை உபகரணம் ஒன்றை செய்திருந்தோம் அந்த கண்காட்சி தான் பூஜா என்ற எங்களது பள்ளி மாணவியை டெல்லி வரை அழைத்து சென்றது ,ஏழை எளிய மாணவர்களுக்கு தமிழக அரசு இந்த அறிவிப்பில் 50 மாணவர்கள் பூஜா தேர்ந்தெடுக்கப்பட்டது பள்ளிக்கு மகிழ்ச்சி அளிக்கிறது, பின்லாந்து ,ஸ்வீடன் கனடா ,போன்ற நாடுகளில் கப்பல், மூலமாகவும், விமானம் மூலமாகவும், தரை பயணமாகும் 10 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் இந்த முழு செலவையும் அரசாங்கம் ஏற்றுக் கொள்வது இந்தியாவிலேயே முதன் முறையாக தமிழகத்தில் மட்டுமே என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன் இதன் மூலம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்களுக்கும், தமிழக முதல்வர் அவர்களுக்கும், கடலூர் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது…

சிதம்பரம் செய்தியாளர்
அகிலன் மணி

565 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close