சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

பொன்னமராவதி ஜூன்10

பொன்னமராவதி வேந்தன்பட்டி சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இருந்து வேந்தன்பட்டி சாலை மிகவும் மோசமான காணப்படுகிறது .இவ்வழியாக மதுரை, பிரான்மலை ,சிங்கம்புணரி, திருக்களம்பூர் உள்ளிட்ட ஊர்களுக்கு பிரதான பேருந்துகள் சென்று வருகின்றன. மேலும் மேலைச்சிவபுரி கல்லூரிக்கு மாணவர்கள் இச்சாலையைதான் அதிகமாக பயன்படுத்துகின்றனர் .ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கானோர் சென்று வரும் இச்சாலையானது மிகவும் மோசமானதாக உள்ளது .மேலும் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல் இரவில் செல்லும் வாகன ஓட்டிகள் விழுந்து காயம்பட்டு செல்கின்றனர். எனவே சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்

பொன்னமராவதி செய்திகளுக்காக
சிவராம கிருஷ்ணன்

90 total views, 3 views today

Registration

Forgotten Password?

Close