சவூதி கூட்டுப்படை- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான தாக்குதல்

0
0

சவூதி கூட்டுப்படை- ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையேயான தாக்குதல்

ஏமனில் நடந்த தாக்குதலில், சவூதி கூட்டுப்படையைச் சேர்ந்த சுமார் 500 பேரை ஹவுதி கிளர்ச்சி படையினர் கொன்று குவித்துள்ளதாக வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியாகியுள்ளன.

ஏமனில், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் சவூதி கூட்டுப்படைக்கும் இடையே தொடர் சண்டை நடைபெற்றுவருகின்றன. ஹவுதி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் முழு ஆதரவை அளித்துவருகிறது.

இந்தப் பிரச்சனையின் காரணமாக 2016ஆம் ஆண்டிலிருந்து இதுவரை சுமார் 70,000 பேர் வரைக்கும் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா கூறுகிறது.

இந்நிலையில், ஏமனில் நடந்த தாக்குதலில் சவூதி கூட்டுப்படையைச் சேர்ந்த சுமார் 500 பேரை ஹவுதி கிளர்ச்சி படையினர் தாக்கி கொன்றதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வீடியோக்களும் வெளியிடப்பட்டுள்ளன. சவூதி கூட்டுப் படையைச் சேர்ந்த ஏராளமான போர் வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்படுவது போலவும், ஏராளமான வீரர்கள் பிடிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்படுவது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.

தாக்குதலில் பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது .தாக்குதல் நடந்தது உண்மை என நிரூபிக்கப்படும் பட்சத்தில் சுமார் 5 ஆண்டு கால போரில் ஹவுதி கிளர்ச்சி படை நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுதான் எனவும் கூறப்படுகிறது. வீடியோ வெளியாகியுள்ளபோதும், இந்த தாக்குதல் உண்மைதானா என்பது குறித்து தங்களது தரப்பு பதிலை சவூதி கூட்டுப்படையினர் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

66 total views, 3 views today