சந்திரயான் 2 திட்ட சிறப்பு நிகழ்ச்சிக்காக உலகமே இருக்கையின் நுனிக்கு வந்து விட்டது – அமெரிக்க விண்வெளி வீரர்

சந்திரயான் 2 விண்கலம், நிலவில் தரை இறங்கவிருக்கும் நிகழ்வைக் காண, உலகமே இருக்கையின் நுனிக்கு வந்து விட்டதாக நாசாவின் முன்னாள் விஞ்ஞானி கூறியுள்ளார்.

நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரான ஜெர்ரி மைக்கேல் லினெஞ்சர், ரஷ்யாவின் மிர் விண்வெளி நிலையத்தில் 5 மாதங்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டவர் ஆவார். அவர், சந்திரயான் 2 விண்கலம், நிலவில் தரை இறங்கவிருப்பதை ஒட்டி சிறப்பு நிகழ்ச்சி நடத்துவதற்காக இந்தியா வந்துள்ளார்.

அப்போது தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்த ஜெர்ரி மைக்கேல் லினெஞ்சர், இஸ்ரோவின் சந்திரயான் 2 திட்டம் தம்மை ஈர்த்திருப்பதாகக் கூறினார். இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த நாடுகளும் ஆர்வத்துடன் சந்திராயன் தரையிறங்குவதைக் காண காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தாம் ஒரு அமெரிக்க விண்வெளி வீரராக இருந்தாலும், சந்திரயான் 2ஐப் பொறுத்தவரை அனைவரும் ஒருதரப்பினர் தான் என்ற அடிப்படையிலேயே வந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

ஆர்பிட்டர் நிலவைச் சுற்றி வருவதே வெற்றி தான் என்று கூறிய ஜெர்ரி மைக்கேல் லினெஞ்சர், நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

345 total views, 3 views today