க்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல ஜனாதிபதியை சந்தித்த பின் சோனியா காந்தி பேட்டி

முக்கிய விவகாரங்களில் மோடி மவுனம் காப்பது நாட்டிற்கு உகந்ததல்ல என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து மனு அளித்த பின் சோனியா காந்தி கூறியுள்ளார்.
ஜனாதிபதியிடம் மனு அளித்த பின் சோனியா காந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முக்கிய விவகாரங்களில் பிரதமர் மோடி தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.இது நாட்டின் நலனுக்கு உகந்தது அல்ல.காங்கிரஸ் கட்சி முழு உத்வேகத்துடன் போராடும்.
இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.
அதனை தொடர்ந்து ராகுல் காந்தி பேசுகையில், ஜனாதிபதி, மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் ஆகியோர் நாட்டில் நிலவி வரும் சகிப்புத்தன்மையற்ற நிலைக்கு எதிர்த்து கருத்து கூறியுள்ளதாக ராகுல் காந்தி கூறினார்.

760 total views, 2 views today