கோவை வணிக வரி அலுவலக வளாகத்தில் தீக்குளிக்க முயன்ற டீக்கடைக்காரர் சிறையில் அடைப்பு

கோவை டாக்டர்.பால சுந்தரம் ரோட்டில் வணிக வரி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் வளாகத்தில் கோவை கெம்பட்டி காலனியை சேர்ந்த செல்வக்குமார் (வயது59) என்பவர் கடந்த 5 வருடங்களுக்கு மேலாக டீக்கடை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் இவரது கடையில் விற்பனை செய்யப்படும் டீயில் கலப்படம் இருப்பதாக உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. இதையடுத்து அதிகாரிகள் இந்த கடையில் சோதனை நடத்தினர். மேலும் டீக்கடை அனுமதிக்கப்பட்ட இடத்தை விட அதிகளவில் இடத்தை ஆக்கிரமித்து இருந்ததும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்ற வந்தனர். இதனால் மனமுடைந்த செல்வகுமார் கடையின் முன்பு மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை தடுத்து நிறுத்தினர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரேஸ்கோர்ஸ் போலீசார் செல்வக்குமாரை கைது செய்தனர்.
அவர் மீது அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

1,358 total views, 2 views today

Top

Registration

Forgotten Password?

Close