கோவை ராமகிருஷ்ணா  மருத்துவமனை சார்பில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு வீடியோ வெளியிடு

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கபட்ட அனிமேஷன் விழிப்புணர்வு வீடியோவை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார்.

உலக புகையிலை ஒழிப்பு தினம் வருடம்தோறும் மே 31ல் கடைபிடிக்கபட்டு வருகிறது. புகையிலை பழக்கத்தால் எட்டு விநாடிக்கு ஒருவர் உயிரிழப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது.புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டு தோறும் 80லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் புகை பிடிப்பவர்கள் அருகில் புகையை சுவாசிப்பவர்களும் பாதிக்கபடுவதாகவும் புகையிலை அதிகம் பயன்படுத்துவதில் சீனா முதலிடம் இந்தியா 159 வது இடத்தில் இருப்பதாக உலக சுகாதார மையம் தெரிவிக்கிறது.மனித இறப்புகள் தோற்றுவிக்கும் காரணிகளில் புகையிலை இரண்டாவது இடத்தை வகிப்பதாக தெரிவிக்கிறது.

புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் ஆராய்ச்சி மையம் சார்பில் தயாரிக்கப்பட்ட அனிமேஷன் வீடியோவை மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி துவக்கி வைத்தார்.

இதன் பின்னர் பேசிய ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர். குகன் பேசுகையில் கடந்த 16 ஆண்டுகளாக புற்றுநோய் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் 4000 மேற்பட்ட வேதி பொருட்களால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது என தெரிவித்தார். மேலும் நுரையீரல் புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் முற்றிய நிலையில் சிகிச்சை பெற வருவதாகவும் தெரிவித்தார். இதன் பின்னர் பேசிய இனை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயண சாமி பேசுகையில் உலகில் ஒரு நிமிடத்தில் 1.1கோடி சிகரெட்டுகள் புகைப்படுவதாகவும் தூக்கி எறியபடும் சிகரெட் துண்டுகளை சுத்தம் செய்வதில் சிரமம் ஏற்பட்டு வருவதாக தெரிவித்தார். புகையிலை பழக்கத்தை ஒழிக்க ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய குழந்தைகளுக்கு 12 கோடி ரூபாய் வரை செலவு  செய்யபட உள்ளதாக தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் கு.ராசமணி பேசுகையில் புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு குறைவாக உள்ளதால் புகையிலை பயன்பாடு அதிகம் உள்ளதாகவும் ஒரு காலகட்டத்தில் பெண் சிசு கொலைகள் தொடர்பாக போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. தற்போது பொதுமக்களிடையே ஏற்பட்டு உள்ள விழிப்புணர்வு காரணமாக குறைந்து உள்ளது போல புகையிலை தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் அனைவரும் இணைந்து உறுதி மொழி எடுக்க வேண்டும் என்றார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புகையிலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளபட்டு வருவதாகவும் தொடர்ந்து தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கபடும் என தெரிவித்தார்.

386 total views, 3 views today